தென்னிந்திய தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். தற்போது இவர் நடிப்பில் கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்த இப்படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், சினேகா, மீனாட்சி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து பூவே உனக்காக, பிரியமானவளே, ஷாஜகான் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு காதல் டிராமாவில் உருவான திரைப்படம் தான் காவலன். தான் காதலிக்கும் பெண் யார் என்று தெரியாமல் விஜய் காதலித்து வருவார். கடைசியில் அந்த காதலியுடன் சேர்ந்தாரா இல்லையா அது தான் படத்தோட கதை. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார். இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்நிலையில் காவலன் படத்தில் அசினுக்கு தங்கச்சியாக நடித்தவர் தான் நடிகை மித்ரா சூரியன். இவர் இதற்கு முன்னர் சாது மிரண்டால் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஒரு சில படங்களில் நடித்து வந்த அவர் திடீரென கல்யாணம் செய்து கொண்டு கணவருடன் செட்டிலாகிவிட்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கிறது. தற்போது மித்ரா சூரியன் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.