2016ல் காவிரி போராட்டத்தில் தீக்குளித்து இறந்த இளைஞன் - சீமான் கட்சி மீது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு!!2016ல் காவிரி போராட்டத்தில் தீக்குளித்து இறந்த இளைஞன் - சீமான் கட்சி மீது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு!!

2016ல் காவிரி போராட்டத்தில் தீக்குளித்து இறந்த இளைஞன்: இந்தியா பாகிஸ்தான் சண்டை போல கடந்த சில வருடங்களாக தமிழகத்திற்கு கர்நாடக மாநிலத்திற்கும் காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இந்த பிரச்சனை எப்போது ஓய்வு பெறும் என்று தெரியவில்லை. நதி நீரை காரணம் காட்டி கடந்த 2016ம் ஆண்டு பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தது. குறிப்பாக தமிழர்கள் கர்நாடக பகுதியில் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக கிளம்பிய நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் திருவாரூரை சேர்ந்த விக்னேஷ் குமார் என்பவரும் கலந்து கொண்ட நிலையில், அவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் உயிரிழந்தார். cauvery river.

அவர் இறந்து 8 ஆண்டுகள் கடந்த நிலையில் அவருடைய தாயார் செண்பகலெட்சுமி நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் சீமான் மீதும் நாம் தமிழர் கட்சி மீதும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதாவது என் மகனுக்கு மணிமண்டபம் கட்டுவதாக கூறி வெளிநாட்டில் இருந்து பணம் வசூலித்து செலவு செய்துள்ளனர். இப்பொழுது வரை மணிமண்டபம் கட்டவில்லை. சொல்லப்போனால் எனது கண் அறுவை சிகிச்சைக்கு கூட சீமான் உதவவில்லை. மேலும் எனக்கு நகை கொடுத்தாக ஒரு பொய்யான தகவல் பரவி வருகிறது. நாம் தமிழர் கட்சி எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை. இதை யாரிடம் வேண்டுமானாலும் கூறுவேன். ஏன் சீமானை சந்தித்து இதைச் சொல்ல சொன்னாலும் சொல்வேன். என் மகனின் உயிர் தியாகத்தை மறந்து விட்டு என் மகன் எந்த கட்சி என்று சிந்தித்து வருகிறார். இது முற்றிலும்  கீழ்த்தரமான விஷயம் என்று செண்பகலெட்சுமி தெரிவித்துள்ளார். kaveri water protest 2016 son died – 2016ல் காவிரி போராட்டத்தில் தீக்குளித்து இறந்த இளைஞன்

Sunil Chhetri Retirement 2024: இந்திய கால்பந்து அணி கேப்டன் திடீர் ஓய்வு – வெளியான ஷாக்கிங் வீடியோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *