அஸ்வந்த் மாரிமுத்து இயக்கிய டிராகன் நடிகை கயாடு லோஹருக்கு அடித்த ஜாக்பாட் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
கயாடு லோஹர்:
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் டிராகன். இப்படம் கிட்டத்தட்ட சுமார் ரூ. 150 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் இப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் நடிகை கயாடு லோஹர். மலையாள படங்கள் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
டிராகன் கயாடு லோஹருக்கு அடித்த ஜாக்பாட்.. முன்னணி ஹீரோவுக்கு ஜோடியா?
சினிமாவுக்குள் வருவதற்கு முன்னர், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அதன் மூலம் பல கோடி ரசிகர்களை தன் பக்கம் வைத்துள்ளார். இப்படி இருக்கையில் டிராகன் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் டிராகன் வெற்றியை தொடர்ந்து தற்போது முன்னணி நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைபவின் பெருசு திரை விமர்சனம் இதோ.., குடும்பத்துடன் சிரித்து மகிழலாம்!!
அதாவது, ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் STR 49 திரைப்படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் ஏற்கனவே சந்தானம் மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா?.., அழகிய புகைப்படம் உள்ளே!!
தளபதி 69 டைட்டில் என்ன தெரியுமா?.., விஜய் பட தலைப்பு தான்? ரசிகர்கள் ஷாக்!!
பிக்பாஸிற்கு பிறகு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.., விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!!