சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் க்கு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், அவர் சினிமாவை விட்டு விலகும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா:
தமிழ் சினிமாவில் பிசியாக வலம் வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமின்றி இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடித்த ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சர்க்கார், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 11ம் தேதி ஆண்டனி தட்டில் என்ற துபாயில் ஒரு பெரிய தொழிலதிபரை கல்யாணம் செய்துள்ளார்.
சினிமாவை விட்டு விலகும் கீர்த்தி சுரேஷ்? .., கல்யாணத்துக்கு பிறகு ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக்?
இவர்கள் இருவரும் 13ம் ஆண்டுகள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இது இரு வீட்டாரின் சம்மதத்துடன் ஹிந்து மற்றும் கிரிஸ்டியன் முறைபடி இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் சினிமாவில் இருந்து விலக போவதாக தொடர்ந்து செய்திகள் இணையத்தில் வெளியாகிய வண்ணம் இருக்கிறது.
புஷ்பா 2 பட கூட்ட நெரிசல் விவகாரம் – அம்மாவை தொடர்ந்து 8 வயது சிறுவன் மூளைச்சாவு!!
மேலும், தற்போது ரிவால்வர் ரீட்டா மற்றும் கண்ணிவெடி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வைத்துள்ளார். இதையடுத்து அவர் எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார். இதை வைத்து பார்க்கும் பொழுது, ஒரு வேளை சினிமாவை விட்டு கீர்த்தி விலகவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு விலகி படத்தயாரிப்பில் ஈடுபட உள்ளார் என்று செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஹீரோவாகும் பிக்பாஸ் சரவண விக்ரம்.., ஹீரோயின் யார் தெரியுமா?.., புகைப்படம் வைரல்!!
விஷால் நடிப்பில் “மார்க் ஆண்டனி 2” – VISHAL போட்ட மாஸ்டர் பிளான்!!
மருத்துவமனையில் பிக்பாஸ் ராணவ் – ரெட் கார்டு வாங்கி வெளியேறும் ஜெஃப்ரி?
45 வயதில் ஹீரோவாகும் காமெடி நடிகர் – சமீபத்தில் தாத்தாவான பிரபலம்!
படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த் – பெரிய ஹைப்பை எகிறவிட்ட சண்முகபாண்டியன்!!