கென்யாவில் பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து: கிழக்கு ஆப்பிரிக்காவில் முக்கியமான நாடுகளில் ஒன்று தான் கென்யா. இந்த நாட்டில் உள்ள நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் படித்து வருகிறார்கள். மேலும் வெளியூரில் இருந்து இங்கே வந்து படிக்கும் மாணவர்கள் விடுதி உள்ளது.
கென்யாவில் பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து
அங்கு மாணவர்களுக்கு தனியாக ஒரு விடுதியும், மாணவிகளுக்கு தனியாக ஒரு விடுதியும் இயங்கி வருகிறது. அங்கு மாணவ மாணவியர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இந்நிலையில், அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் விடுதியில் இருந்த மாணவர்கள் அலறி அடித்து ஓடி வந்தனர். மேலும் இந்த கோர விபத்தில் கிட்டத்தட்ட 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி இந்த விபத்தில், 13 மாணவர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர். fire accident
Also Read: ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் – வெளியான சூப்பர் தகவல்!
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை, தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்து நீண்ட நேரத்திற்கு முழுவதுமாக அனைத்து முடித்தனர். இதை தொடர்ந்து தீ காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். kenya school hostel
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை