
Breaking News: சபரிமலைக்கு 8 ஆயிரம் கிலோ மீட்டர் பாதயாத்திரை வரும் 2 பேர்: பொதுவாக கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக சபரிமலை ஐயப்பன் கோவில் திகழ்ந்து வருகிறது. இங்கு கார்த்திகை மாதம், சித்திரை விசு உள்ளிட்ட காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மேலும் ஐயப்பன் கோவிலுக்கு கேரளாவில் இருந்து நீண்ட தூரம் பாதயாத்திரை மேற்கொண்டு ஐயப்பனை காண செல்கின்றனர். இப்படி இருக்கையில் கேரளாவை சேர்ந்த இரண்டு பேர் கிட்டத்தட்ட 8 ஆயிரம் கிலோ மீட்டர் பாதயாத்திரை செல்ல முடிவு செய்துள்ளதாக ஒரு ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
சபரிமலைக்கு 8 ஆயிரம் கிலோ மீட்டர் பாதயாத்திரை வரும் 2 பேர்
அதாவது, கேரள மாநிலம் காசர்கோடு குட்லு பகுதியை சேர்ந்த புகைப்பட கலைஞரான சனத்குமார் நாயக், கூலி தொழிலாளியான சம்பத்குமார் ஷெட்டி உள்ளிட்ட இரண்டு பெரும் வருடந்தோறும் பாதயாத்திரை செல்வது வழக்கம். அந்த வகையில் இம்முறை தூரத்தை அதிகரிக்க அவர்கள் பத்ரிநாத்தில் நடக்க அங்கு சென்றுள்ளனர்.
Also Read: நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அதிரடி கைது – என்ன காரணம் தெரியுமா?
அங்கு இருந்து கேரளாவுக்கு கிட்டத்தட்ட 8 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கிடையில் இருக்கும் கோயில்களுக்கு செல்லவும் அவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர்.
அவர்கள் ஐயப்பன் கோவிலை அடைய 7 மாதங்கள் ஆகும். தற்போது அவர்களை பற்றி தான் சோசியல் மீடியாவில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.
அப்படி போடு.., கலைஞர் ஐயாவுக்கு பெருமை சேர்த்த நாணயம்?
அடக்கடவுளே.., காலையிலேயே இப்படி ஒரு சோகமா?
மக்களே ரெடியாகிக்கோங்க.., இந்த பகுதியில் நாளை பவர் கட்