கார் விபத்தில் சிக்கிய கேரள முதல்வர் பினராயி விஜயன்: கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது எஸ்கார்ட் வாகனங்களின் பாதுகாப்புடன் அவருடைய காரில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வாமனபுரத்தில் சென்று கொண்டிருந்தார்.
கார் விபத்தில் சிக்கிய கேரள முதல்வர் பினராயி விஜயன்
பொதுவாக முதல்வர், அரசு துறையை சேர்ந்த அதிகாரிகள் வரும் பொழுது சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படுவது வழக்கம். ஆனால் இன்று முதல்வர் பினராயி விஜயன் செல்லும் பொழுது, போக்குவரத்து தடை செய்யப்படாமல், வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தன.
அந்த சமயம் சாலையில் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமாக ஒரு பெண் இருசக்கர வாகனத்தில் இண்டிகேட்டரை போட்டு சட்டென திரும்பி உள்ளார். இதை எதிர்பார்க்காத டிரைவர் அந்தப் பெண்ணின் மீது மோதி விடாமல் இருக்க சட்டென பிரேக் பிடித்தார். இதனால் காருக்கு பின்னே வந்த மூன்று வாகனங்களும் அடுத்தடுத்து சட்டென பிரேக் அடித்தன.
சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு 20% போனஸ் 2024- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
இதில் 3வது வாகனத்தில் தான் முதல்வர் இருந்த நிலையில், 5வதாக வந்த வாகனம் முதல்வர் வாகனத்தின் மீது மோதி நின்றது. இதனால் அடுத்தடுத்த வாகனங்கள் மோதி நின்றது. இந்த விபத்தில் முதல்வர் பினராயி விஜயனின் கார் சிறிதளவு சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக அவர் காயமின்றி தப்பினார். இதனால் அந்த சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய்
புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட்
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானங்களில் சிறப்பு