Home » செய்திகள் » கேரளாவில் தீவிர மெடுக்கும் டெங்கு & காலரா – ஒரே நாளில் காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழப்பு!!

கேரளாவில் தீவிர மெடுக்கும் டெங்கு & காலரா – ஒரே நாளில் காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழப்பு!!

கேரளாவில் தீவிர மெடுக்கும் டெங்கு & காலரா - ஒரே நாளில் காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழப்பு!!

Breaking News: கேரளாவில் தீவிர மெடுக்கும் டெங்கு & காலரா: கேரளாவில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். தெளிவாக சொல்ல போனால்  காலரா, டெங்கு, எலி காய்ச்சல் மற்றும்  வெஸ்ட் நைல் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்கள் தான் தொடர்ந்து பரவி வருகிறது.

எனவே இதுவரை மருத்துவமனையில் கிட்டத்தட்ட  12 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 438 பேர் டெங்கு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல்  4 பேருக்கு காலராவும், 4 பேருக்கு எலிக்காய்ச்சலும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று ஓரே நாளில் கிட்டத்தட்ட 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இறந்தவர்களில் 26 வயது ஒரு இளைஞன் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஜிம்பாப்வேயுடன் இன்று 4வது டி20 போட்டி – ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை முடிக்குமா இந்திய அணி?

எனவே எடக்கரை பகுதிகளிலும் காய்ச்சல் தீவிரம் அடைந்துள்ளதால் அங்கு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மக்கள் காய்ச்சல் குறித்து ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனையில் அணுகுமாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top