நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாக எழுந்த விவகாரம் கேரள திரைப்பட சங்கம் (AMMA ) பொறுப்பு, 4 பேர் ராஜினாமா செய்ய மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள திரைப்பட சங்கம் (AMMA ) பொறுப்பு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கேரள நடிகர் சங்கம் :
கேரள நடிகர் சங்கத்தின் (AMMA ) தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். அத்துடன் மலையாள திரைப்பட நடிகர் சங்கத்திலிருந்து தலைவர் மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். அந்த வகையில் மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக ஹேமா குழு அறிக்கையை தொடர்ந்து கேரள திரையுலகில் நடிகைகள் பலர் பாலியல் புகார்களை எழுப்பி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Kerala Film Association (AMMA) post
சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு :
இதனையடுத்து பாலியல் புகார்களை தொடர்ந்து நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்து வருகின்றனர். மேலும் நடிகைகள் பாலியல் புகார் காரணமாக கேரள நடிகர் சங்க பொதுச்செயலாளர் சித்திக் ஏற்கனவே ராஜினாமா செய்த நிலையில், மலையாள நடிகர் சங்கத்தில் செயற்குழு முழுவதும் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் மோகன்லால் ராஜினாமா – கலைந்தது மலையாள நடிகர் சங்கம்!
4 பேர் ராஜினாமா செய்ய மறுப்பு :
இந்நிலையில் கேரள திரைப்பட சங்க பொறுப்பிலிருந்து விலக 4 பேர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வினு மோகன், அனன்யா, டொவினோ தாமஸ், சரயு ஆகியோர் ராஜினாமா செய்ய மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. Kerala 4 people are reported to have refused to resign
கேரள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்வதாக அறிவிக்கப்பட்டது.