ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதால் ரூ. 86,500 அபராதம். கேரளாவில் இருசக்கர வாகனம் ஓட்டும் போது பல முறைகள் ஹெல்மெட் இல்லாமல் ஓடியதால் இளைஞர் ஒருவருக்கு போக்குவரத்து அதிகாரிகள் ரூ. 86,500 ரூ அபராதம் விதித்துள்ளனர்.
ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதால் ரூ. 86,500 அபராதம் – கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !
இரு சக்கர வாகனம் & ஹெல்மெட் :
தற்போது இருக்கும் வாகனங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படும் வாகனம் பைக் போன்ற இருசக்கர வாகனங்கள் தான். இவைகளை ஓட்டும் போது விபத்துகள் ஏற்ப்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கி விட்டது. இதனால் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும் போது உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க முடியும். சிலர் எங்கு சென்றாலும் ஹெல்மெட் பயன்படுத்துவதை மறப்பதில்லை. ஆனால் சிலர் ஹெல்மெட் பயன்படுத்துவதும் இல்லை.
அபராதம் :
இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வபர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். வாகனம் ஓட்டுபவரும் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து விதி முறை இருக்கின்றது. இல்லையென்றால் அபராதம் தான். இந்த செயல்முறை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்படுகின்றது.
கேரளா மாநிலத்தில் ஹெல்மெட் அணியவில்லை என்றால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படுகின்றது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓடியதால் அபராத தொகையை கட்டாததால் இளைஞர் ஒருவர் தான் பைக்கை இழந்துள்ளார்.
173 முறை அபராதம் :
கேரளா மாநிலம் செருகுன்னு பகுதியை சேர்ந்த ஒருவர் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டி இருக்கின்றார். கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் சுமார் 173 முறைகள் ஹெல்மெட் போடாமல் வாகனம் இயக்கி இருக்கின்றார். போக்குவரத்து காவல் துறையினரின் ட்ராபிக் கேரமவில் சிக்கி இவரின் மேல் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு இருந்துள்ளது.
Power Cut நாளை மின்தடை (08.11.2023) ! மக்களே அலர்ட் தமிழகத்தில் முக்கிய இடங்களில் பவர் கட் இருக்கு !
பைக் பறிமுதல் :
173 முறைகள் வழக்கு பதிவு செய்தும் இவர் அபராத தொகையை கட்டவில்லை. இதனால் தற்போது இவரின் அபராத தொகை ரூ. 86,500 வந்து விட்டது. இவர் அபராத தொகையை செலுத்தாத காரணத்தினால் RTO அதிகாரிகள் இளைஞரின் வீட்டிற்க்கே சென்றுள்ளார். அங்கிருந்த இளைஞரின் பைக்கை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர்.
அறிவுரை :
அபராத ரசீது பெற்றும் அபராத தொகையை காட்டாமல் ஒவ்வரு முறையும் தப்பித்து விட்டார் இளைஞர். எனவே அபராத தொகையை செலுத்தி விட்டு பைக்கை திரும்ப எடுத்து செல்லலாம் என்று இளைஞருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
அபராதம் என்பது விதிமுறைகளை நாம் மீறும் போது நமக்கு வழங்கும் எச்சரிக்கை. ஒரு முறை அபராதம் பெற்று விட்டால் அடுத்த முறை கவனமாக நாம் இருப்போம். ஆனால் கேரளாவில் நடந்த இச்செயல் ஹெல்மெட் அணியாமல் செல்லும் ஒவ்வருவருக்கும் படமாக இருக்க வேண்டும். ஹெல்மெட் அணிவது நம் பாதுகாப்பிற்கு தான் என்பதை இனியாவது இளைஞர்கள் உணர வேண்டும்.