கேரளா கோழிக்கோடு: விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்த விவகாரம்: கேரளா கோழிக்கோடு பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனை ஒன்றில் நான்கு வயது சிறுமி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சிறுமிக்கு ஆறு விரல் இருந்துள்ளது. ஆயிரத்தில் ஒருத்தருக்கு மட்டுமே இந்த ஆறாவது விரல் தோன்றும். அப்படி பட்ட அந்த விரலை எடுக்க தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்படி இருக்கையில் அறுவை சிகிச்சை நடைபெற்று வெளியே வந்த சிறுமியை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது விரலை அகற்ற வந்த சிறுமிக்கு மருத்துவர் பிஜான் ஜான்சன் விரலில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை தவறுதலாக நாக்கில் செய்துள்ளார். இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்த நிலையில் கத்தி கூப்பாடு போட்டு விட்டார்கள். இதனால் அந்த மருத்துவமனையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு இது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2024: எப்போது நடைபெறுகிறது தெரியுமா? வெளியான ஹாட் தகவல்!!
எனவே அறுவை சிகிச்சை செய்த பிஜான் ஜான்சனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் சிறுமியின் குடும்பத்தினர் புகார் கொடுத்த பேரில் காவல்துறை அந்த மருத்துவர் ,மீது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய குற்றத்திற்காக சட்டப்பிரிவு 336 மற்றும் 337-ன் கீழ் வழக்கு பதிவு செய்தது.
kerala kozhikode doctor suspended கேரளா கோழிக்கோடு: விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்த விவகாரம்
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 2024
தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா?
தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா