கேரளாவில் இன்று 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் ஓரிரு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
இப்பொழுது வரை கனமழை குறைந்த பாடில்லை. சமீபத்தில் ஒரு சில நாட்கள் கனமழை பெய்யாமல் இருந்தாலும் கூட கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்தநிலையில் இந்திய வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரூ.4000க்கும் மேல மின் கட்டணம் வருதா? அப்போ நீங்க இப்படிதான் பில் கட்டனும்!
குறிப்பாக, பாலக்காடு, மலப்புரம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மழையுடன் பலத்த காற்றும், இடி, மின்னலும் காணப்படும் என்று இந்திய வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த 15 மாவட்டங்களில் கனமழை
மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிய வழக்கு
திருமலைக்கு பாதயாத்திரை சென்ற பவன் கல்யாண்
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – ஆன்லைன் வகுப்பு எடுத்தால் நடவடிக்கை