சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஒவ்வொரு வருடமும் மலையாள மொழி பேசும் மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை என்றால் அது ஓணம் தான். குறிப்பாக கேரளாவில் தான் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும்.
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அந்த வகையில் கேரளாவில் இந்த வருடத்திற்கான ஓணம் பண்டிகை நாளை செப்டம்பர் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த நல்ல நாளில், புது துணி அணிந்து, விதவிதமான உணவு பொருட்களைச் சமைத்து உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து மக்கள் கொண்டாடுவார்கள்.
மேலும் இந்த பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Also Read: உத்தரபிரதேசம் ஒரு கடையில் ஜூஸில் சிறுநீர் கலப்பு – வெளியான ஷாக்கிங் வீடியோ!
அதே போல் இன்று முதல் வரும் செப் 21 ஆம் தேதி வரை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கிறது. குறிப்பாக இந்த பூஜையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
தூக்கிலிடும் முன் கைதி காதில் சொல்லப்படும் வார்த்தை என்ன தெரியுமா?
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!
திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி