தி கேரளா ஸ்டோரி படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ‘தி கேரளா ஸ்டோரி’ படம்
கடந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய திரைப்படம் என்றால் அது தி கேரளா ஸ்டோரி. இப்படத்தை சுதிப்தோ சென் இயக்கி இருந்தார். இப்படத்தின் டீசர் வெளியான நாளில் இருந்து படத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் தானாக முன்வந்து தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட மாட்டோம் என அறிவித்தது. தமிழகத்தில் எந்த தியேட்டரிலும் இந்த படத்தை திரையிட முன்வரவில்லை. அதே போல் மேற்கு வங்கத்திலும் இந்த படத்தை வெளியிட தடை விதித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் இப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் பல தடைகளை மீறி வெளியான இப்படம் உலக அளவில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. சமீபத்தில் இப்படம் ஓடிடியில் வெளியான நிலையில், தூர்தர்ஷனில் இன்று (05.04.2024) இரவு 8 மணிக்கு ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ஒளிபரப்பாகிறது. இப்படி டிவியில் ஒளிபரப்பாவதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, ” அரசு டிவி தொலைக்காட்சி ஒரபோதும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ் கூட்டணியின் பிரச்சார இயந்திரமாக மாறக்கூடாது. இப்படி வெறுப்பை விதைக்கும் முயற்சிகளை கேரளா ஒருபோதும் அனுமதிக்காது” எனத் தெரிவித்துள்ளார். தி கேரளா ஸ்டோரி ஒளிபரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது