தற்போது கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அத்துடன் நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.Kerala Wayanad Landslide
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கேரளா வயநாடு :
கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு, முண்டகை, சூரல்மலை போன்ற பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. breaking news today
அத்துடன் நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நிலச்சரிவில் வீடுகள், வாகனங்கள் மண்ணில் புதைந்த நிலையில் ஏராளமானோரை காணவில்லை என கூறப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் கேரள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள முதல்வரிடம் பேசிய பிரதமர் மோடி :
அந்த வகையில் கேரள வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து பலர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு சார்பில் கேரளாவிற்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.
மேலும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்காலிக நிதியுதவியாக ரூ.2 லட்சமும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு ரூ.50,000மும்,
நிதி உதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.Prime Minister Modi announces financial assistance
யூடியூபர் பிரியாணி மேன் அபிஷேக் ரபி கைது – சென்னை சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை !
வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி :
வயநாடு, முண்டகை, சூரல்மலை போன்ற பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் ப்ரியங்கா காந்தியும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.Kerala Wayanad district Massive Landslide death news