Breaking News: கேரள வயநாடு நிலச்சரிவு விவகாரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த 30ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் 160 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரள வயநாடு நிலச்சரிவு விவகாரம்
மேலும் பெரும்பாலான மக்கள் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தொடர்ந்து மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து விளாங்காடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட போது முன்னாள் ஆசிரியரான மேத்யூ குலந்திங்கல் மற்றும் அவரது வீட்டு பக்கத்து வீட்டுக்காரன் ஆகியோர் தப்பியுள்ளனர். kerala
அதன்பின்னர் அவர்களும் சேர்ந்து மற்றவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று திடீரென ஏற்பட்ட 2வது நிலச்சரிவில் மேத்யூ குலந்திங்கல் அடித்து செல்லப்பட்ட நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். Wayanad
Also Read: குறி வச்சா இரை விழணும் – பாரிஸ் ஒலிம்பிக் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே!!
வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவுக்கு உதவும் விதமாக பலவேறு அமைப்பினர் அங்கு சென்று கொண்டிருக்கின்றனர். தற்போது சோசியல் மீடியாவில் #Save Wayanad என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. Wayanad landslide death incident
பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை
தமிழகத்தில் இது தான் முதல் முறை
ஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவச டேட்டா ஆஃபர்
தமிழக மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி!