கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு - ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை - உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து !கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு - ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை - உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து !

தற்போது கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை விடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.Pinarayi Vijayan

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளபெருக்க காரணமாக வயநாடு, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலச்சரிவில் வீடுகள், வாகனங்கள் போன்றவை மண்ணில் புதைந்தன. இந்த சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து மீட்பு பணிகள் தொடர்ந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கேரள மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.Kerala Wayanad massive Landslide

வயநாடு நிலச்சரிவு சமபவத்திற்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வருத்தம் தெரிவித்தனர்.

அத்துடன் தமிழ்நாடு சார்பில் 5 கோடி நிதியும், பேரிடர் மீட்பு குழுவினரும் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

யுபிஎஸ்சியின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் ஐஏஎஸ் நியமனம் – நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் !

வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள அரசிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது எனவும், ஆபத்தான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றாமல் பினராயி விஜயன் அரசு அலட்சியமாக இருந்ததே இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம் என்றும் அமித்ஷா கூறினார்.

இதனை தொடர்ந்து மத்திய அரசு கொடுக்கும் எச்சரிக்கையை மாநில அரசுகள் படித்து பார்க்க வேண்டும் என்றும், குஜராத் மாநிலத்திற்கு முன்கூட்டியே புயல் எச்சரிக்கை கொடுத்தோம் அதன் காரணமாக அங்கு சிறு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *