கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம் - முதல்வர் பினராயி விஜயன் 1 லட்சம் நிதியுதவி - அவரது மனைவி ரூ.33,000 வழங்கினார் !கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம் - முதல்வர் பினராயி விஜயன் 1 லட்சம் நிதியுதவி - அவரது மனைவி ரூ.33,000 வழங்கினார் !

தற்போது கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம், கேரள முதல்வர் பினராயி விஜயன் 1 லட்சம் நிதியுதவி மற்றும் அவரது ரூ.33,000 த்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் முண்டகை, சூரல்மலை போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த வகையில் இந்த நிலச்சரிவின் காரணமாக வீடுகள், வாகனங்கள் போன்றவை மண்ணில் புதைந்தன.

இதனால் 350க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வரை இந்திய ராணுவம், காவல்துறை, கேரள வனத்துறை வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் இந்த வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 5 கோடி நிதியுதவி மற்றும் பேரிடர் மீட்பு குழுவை கேரளாவிற்கு அனுப்பிவைத்தார்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லால் காங்கிரஸ் கட்சி சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 வீடுகள் கட்டி தரப்படும் என்று உறுதியளித்தார்.

வயநாட்டில் 4 பேர் உயிருடன் மீட்ட ராணுவ வீரர்கள் – நான்கு நாட்களுக்கு பிறகு வந்த மகிழ்ச்சியான செய்தி!

கேரள மாநிலம் வயநாட்டில் முண்டகை, சூரல்மலை போன்ற பகுதிகள் நிலச்சரிவால் கடும் பாதிப்படைந்துள்ளது. இதனால் பல்வேறு தரப்பிலிருந்து கேரளா அரசிற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் 1 லட்ச ரூபாயும் அவரது மனைவி டி.கே.கமலா ரூ.33,000 த்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *