Breaking News: கேரள மாநிலத்திற்கு மீண்டும் மஞ்சள் எச்சரிக்கை: கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். இன்னும் மீட்பு படையினர் தங்கள் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலத்திற்கு மீண்டும் மஞ்சள் எச்சரிக்கை
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள காரணத்தால் தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும். அதுமட்டுமின்றி மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய ஜார்க்கண்ட் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற கூடும். மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. weather report news in tamil
Also Read: கேரள வயநாடு நிலச்சரிவு விவகாரம் – மீட்பு பணியில் ஈடுபட்ட இறங்கியவரும் உயிரிழப்பு!!
குறிப்பாக கேரள மாநிலத்தில் ஓரிரு இடங்களில் இன்று 7 முதல் 11 செ.மீ. வரையிலான கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. india meteorological centre
பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை
தமிழகத்தில் இது தான் முதல் முறை
ஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவச டேட்டா ஆஃபர்
தமிழக மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி!