KH234 கமலுடன் இணையும் மணிரத்னம்KH234 கமலுடன் இணையும் மணிரத்னம்

  கமல்ஹாசன் தற்போது 233வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை இந்த ஆண்டும் இவர் தான் தொகுத்து வழங்க இருக்கின்றார். இதனை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் கமலின் 233வது திரைப்படத்தில் நடிக்கின்றார்.   அதன் பின்னர் KH234 கமலுடன் இணையும் மணிரத்னம் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் பிப்ரவரியில் தொடங்க உள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

KH234 கமலுடன் இணையும் மணிரத்னம்

KH234 கமலுடன் இணையும் மணிரத்னம்

கமல்ஹாசனின் திரைப்பயணம் :

  இவர் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் 1960ம் ஆண்டுகளில் அறிமுகம் ஆனவர். தற்போது வரையில் திரைத்துறையில் நடனம் , நடிப்பு , பாடல் , தயாரிப்பு , நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் இயக்கம் என அனைத்து துறைகளிலும் முதன்மையாக திகழ்கின்றார். தற்போது வரையில் மட்டும் 232 திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடித்த விக்ரம் திரைப்படம் பல வசூல் சாதனையை செய்தது அனைவரும் அறிந்ததே. 

வில்லனாய் கமல்ஹாசன் :

  பாகுபலி நாயகன் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே “கல்கி 2898 ஏ.டி ” திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தில் கமல் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி , KH233 திரைப்படங்களுக்கு இடையில் 20 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் இவர் கலந்து கொள்ள இருக்கின்றார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கும் இத்திரைப்படத்தில் கமல் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க 150கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

லியோ ட்ரைலர் புதிய தகவல் வந்தது ! முக்கிய தகவல் உள்ளே !

35 ஆண்டுகளுக்கு பின் :

  1987ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நாயகன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். 35 ஆண்டுகளுக்கு பின் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் KH234 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். ஆனால் தற்போது கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கின்றார். மேலும் KH233 திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார்.

KH233ல் ராணுவ வீரனா :

  KH233 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கின்றது. இதனை தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தினை இயக்கிய வினோத் தான் இயக்க இருக்கின்றார். கமல்ஹாசன் ராணுவ உடை அணிந்து துப்பாக்கி சுடும் பயிற்சி செய்வது போல் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியது. திரைபடக்குழு சார்பில் இப்பொது வரையில் எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லை. இதனை கொண்டு இவர் 233வது திரைப்படத்தில் ராணுவ வீரராக நடிக்கின்றார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்க்கு முன் விஸ்வரூபம் திரைப்படத்திலும் கமல்ஹாசன் ராணுவ அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

KH234ல் கதாநாயகி :

  பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பை மேலும் மெருகூட்டிய திரிஷா KH234 திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இருக்கின்றார். மேலும் நடிகர் துல்கர் சல்மான் , ஜெயம்ரவி ஆகியோர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் பல திரைபிரபலங்கள் நடிக்க இருக்கின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்

ப்ரோமோ டீசர் வெளியீடு :

  கமல்ஹாசன் நடிக்கும் KH234 திரைப்படத்தின் ப்ரோமோ படப்பிடிப்பு கூடிய விரைவில் நடத்தப்படும். இதில் யாரெல்லாம் நடிக்கின்றார் , திரைப்படம் எப்போது வெளியாகும் , இசையமைப்பாளர் யார் என்பது போன்ற பல தகவல்கள் டீசர் வெளியீட்டின் பொது நமக்கு தெரிய வரும். இந்த டீசர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் KH233 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதர்க்கு முன்பும் வெளியாகும்.

KH234 கமலுடன் இணையும் மணிரத்னம்

KH234 கமலுடன் இணையும் மணிரத்னம்

KH234 எப்போது வெளியாகும் :

  வழக்கம் போல் பிக் பாஸ் சீசன் 7நிகழ்ச்சியை கமல்ஹாசன் தற்போது தொகுத்து வழங்க இருக்கின்றார். இதனை தொடர்ந்து வினோத் இயக்கத்திலும் நடிக்க இருக்கின்றார். எனவே மணிரத்னம் இயக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *