இந்த ஆண்டுக்கான குகேஷ் மனுபாக்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது 2025 பட்டியல் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
விளையாட்டுத் துறையில் தொடர்ந்து வீரர்கள் சாதனை படைத்து வருகின்றனர். மேலும் அப்படி சாதனை படைத்து சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுகள் பட்டியலை விளையாட்டுத் துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
குகேஷ் மனுபாக்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது 2025.. மத்திய அரசு அறிவிப்பு!!
பொதுவாக “கேல் ரத்னா” விருது என்பது இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஒரு உயரிய விருதாகும். இந்த விருதை வாங்க வேண்டும் என்று பல வீரர்களுக்கு கனவாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்பிரீத், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் பிரவின் குமார் உள்ளிட்ட நான்கு பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ் வி சேகருக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை.., என்ன காரணம் தெரியுமா?
இது தவிர 17 பாரா தடகள வீரர்கள் உட்பட 32 வீரர்கள் அர்ஜுனா விருது பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற ஜனவரி 17 ம் தேதி காலை 11 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், மேற்கண்ட நான்கு பேருக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதுகளை வழங்க இருக்கிறார். அவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தீவிரமாக பரவும் `ஸ்கரப் டைபஸ்’ பாக்டீரியா தொற்று.., மருத்துவர்கள் எச்சரிக்கை!!
ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து.., வெளியான முக்கிய அறிவிப்பு!
அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி 2025.., விண்ணப்பிப்பது எப்படி?