
kingston movie review in tamil: நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷின் 25வது திரைப்படமாக இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள திரைப்படம் தான் கிங்ஸ்டன். இப்படத்தை அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார். திகில் கலந்த ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தின் திரைவிமர்சனம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
திரைவிமர்சனம்:
1982ல் தூவத்தூர் கடல் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் போனால் பிணமாக தான் கரைக்கு வருகிறார்கள். இதனால் மீன் பிடிக்க கடலுக்கு போக கூடாது என்று அரசு உத்தரவிட்டது. சில ஆண்டுகளுக்கு பிறகு பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஜி.வி. பிரகாஷ் (கிங்ஸ்டன்), எப்படியாவது கப்பல் வாங்கி கடலுக்கு சென்று மீன் பிடித்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தாமஸ் என்பவரிடம் வேலை செய்து வருகிறார்.
kingston movie review in tamil

இதையடுத்து முதலாளி தப்பான தொழில் செய்து வருவதை அறிந்த ஜிவி அவரிடம் இருந்து விலகி, தனது நண்பர்களுடன் சேர்ந்து துணிச்சலுடன் கடலுக்கு செல்கிறார். பெரியோர்கள் சொல்லும் பொய் கதையை நாங்கள் உடைக்கிறோம் என்று கடலுக்கு செல்கிறார்கள். இதையடுத்து அவர்கள் கரைக்கு உயிரோடு வந்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை.
கிளாப்ஸ்:
கதைக்களம் அருமையாக உள்ளது.
ஜி.வி. பிரகாஷ் முதல் அனைத்து நடிகர்கள், நடிகைகள் நடிப்பு நன்றாக உள்ளது.
ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கம் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
கடலில் வந்த creature அற்புதம்.
நாளை ரிலீசாகும் தமிழ் படங்கள் லிஸ்ட்.., இந்த ரேஸில் எந்த படம் வெற்றி பெறும்!!
பல்ப்ஸ்:
மந்தமாக உள்ள திரைக்கதை.
எடிட்டிங் சொதப்பல்.
மேலும் இந்த படத்திற்கு ரேட்டிங் 5க்கு 3.5 கொடுக்கலாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா?.., அழகிய புகைப்படம் உள்ளே!!
தளபதி 69 டைட்டில் என்ன தெரியுமா?.., விஜய் பட தலைப்பு தான்? ரசிகர்கள் ஷாக்!!
பிக்பாஸிற்கு பிறகு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.., விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!!