நேற்று நடந்த பெங்களூரு – கொல்கத்தா லீக் போட்டியில் முக்கிய வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளதாக IPL நிர்வாகம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
பெங்களூரு – கொல்கத்தா:
IPL தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து நேற்று சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் போட்டி நடந்தது. பொதுவாக இந்த இரண்டு அணிகளும் விளையாடும் போது ரசிகர்கள் இந்தியா பாகிஸ்தான் மேட்ச் போல் கொண்டடுவார்கள். அந்த வகையில் நேற்று இந்த போட்டியை காண பெரும்பாலான ரசிகர்கள் திரண்டனர். மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி நேற்றைய போட்டியின் போது கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணி வீரர் ஒருவர் சாதனையை படைத்துள்ளார். அதாவது கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வீரரான ஆந்த்ரே ரசல் (Andre Russell) நேற்று நடந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி 100 விக்கெட் மற்றும் 1000 ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் தான் சென்னை அணியின் முக்கிய வீரர் ரவீந்திர ஜடேஜா. இவர் 152 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார்.
லோக்சபா தேர்தல்.., பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய முக்கிய புள்ளி.., சூடுபிடிக்கும் அரசியல் களம்!!
சாதனை வீரர்களின் பட்டியல்:
- ரவீந்திர ஜடேஜா (152) – 2724 ஓட்டங்கள்
- ஆந்த்ரே ரசல் (100) – 2326 ஓட்டங்கள்
- டிவைன் பிராவோ (183) – 1560 ஓட்டங்கள்
- அக்சர் படேல் (113) – 1454 ஓட்டங்கள்
- சுனில் நரைன் (165) – 1048 ஓட்டங்கள்