Home » செய்திகள் » IPL 16 Match 2024 – ஹாட்ரிக் வெற்றி பெறுமா கொல்கத்தா ? KKR VS DC Live Review !

IPL 16 Match 2024 – ஹாட்ரிக் வெற்றி பெறுமா கொல்கத்தா ? KKR VS DC Live Review !

IPL 16 Match 2024

IPL 16 Match 2024: 10 அணிகள் விளையாடும் ஐபில் போட்டியில் இன்று 16வது போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளது. விசாகப்பட்டினம்தானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.

டெல்லி கேப்பிடல் தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோல்வி கண்டது. 2வது ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் 12 ரன் வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்தது. மூன்றாவது போட்டியில் CSK வை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் 191 ரன்களை குவித்து சென்னை அணிக்கு சவால் விட்டது. இறுதியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியில் டேவிட் வார்னர், பிரிதிவி ஷா, நல்ல அடித்தளம் அமைக்கின்றனர். விபத்தில் இருந்து மீண்ட ரிசப் பண்ட் பார்ம்க்கு திருப்பி உள்ளார். பந்து வீச்சில் முகேஷ் குமார், அக்சர் படேல் , சிறப்பாக ஆடி வருகின்றனர்.

எக்குத்தப்பா எகிறிய தங்கம் விலை..,, யாத்தே ஒரு பவுன் இவ்வளவு ரூபாயா?.., கண்கலங்கிய இல்லத்தரசிகள்!!

இதுவரை தோல்வி காணாத அணியாக உள்ளது கொல்கத்தா. முதல் இரண்டு போட்டியில் ஹைதராபாத் மற்றும் பெங்களூருவை பந்தாடியது. பேட்டிங்கில் சால்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கலக்கி வருகின்றனர். ஆல்ரவுண்டர் ரிங்கு சிங் தனது வேலையை சரியாக செய்து வருகிறார். பௌலிங்கை பொறுத்தவரை சிறப்பாக அமையவில்லை. அதிக விலைக்கு வாங்க பட்ட மிட்சல் ஸ்டார்க் ரன்களை வாரி வழங்குகிறார். வருண் சக்கரவர்த்தியும் விக்கெட் எடுப்பதில்லை. அனாலும் தொடர்ந்து 3வது வெற்றி பெற நினைத்து இன்று களம் இறங்கும் கொல்கத்தா.

கொல்கத்தா – 54 %

டெல்லி – 46 %

Join Whatsapp Group

இதுவரை நேருக்கு நேர் 31 போட்டியில் ஆடி உள்ளனர். டெல்லி 15 வெற்றியும் கொல்கத்தா 16 வெற்றியும் பெற்றுள்ளது. விசாகப்பட்டினம் மைதானத்தில் டெல்லி வெற்றி பெற்றுள்ளது. அதை தொடர நினைக்கும். அதே வேளையில் கொல்கத்தா ஹாட்ரிக் வெற்றி பெற போராடும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top