
கொடைக்கானலில் காட்டுத்தீ
மலைப்பகுதியில் இருக்கும் காடுகளில் பொதுவாக காட்டு தீ ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சீதோஷ்ன நிலை மாற்றத்தின் காரணமாக காட்டுத்தீ பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி தேனி, குரங்கணி பகுதியில் உள்ள கொழுக்குமலை அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில், மலை பகுதிக்குள் ட்ரெக்கிங் சென்ற 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அது போல் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக வனத்துறையினர் தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இதனை தொடர்ந்து மலைகளின் இளவரசி-யாக இருக்கும் கொடைக்கானலில் கடந்த 10 நாட்களாக சில பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானல் பெருமாள் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான “மஞ்சும்மல் பாய்ஸ்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “குணா” குகை-யை பார்வையிட மக்கள் கூட்டம் அலைமோதும் என்றும், காட்டுத்தீ சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளூர்வாசிகள் மூலம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.