கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் மிதந்த பெண் சடலம்: சமீபத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து வர இருக்கும் நிலையில், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் மிதந்த பெண் சடலம்
மேலும் அங்கும் கனமழை பெய்து வருவதால், வெள்ளி நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெள்ளி நீர்வீழ்ச்சி முன்பகுதியில் தலை இல்லாமல் ஒரு பெண்ணின் சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இதனை பார்த்த சுருள பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதை தொடர்ந்து கொடைக்கானல் போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை எடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருப்பதால் அடையாளம் காண சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னைக்கு வரப்போகும் புது ஆபத்து – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
மேலும் அந்த பெண் தண்ணீரில் விழுந்து இறந்தாரா? அல்லது வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு பலியானாரா? அல்லது கொலை செய்து உடல் இங்கு வீசப்பட்டதா? என்று பல்வேறு கோணத்தில் போலீசாரை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2025 வெளியீடு
பிரதமர் மோடியின் இன்டெர்ன்ஷிப் திட்டம் – 1.55 லட்சம் பேர் விண்ணப்பம் !
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னைக்கு ரெட் அலெர்ட் ?
சபரிமலைக்கு போகும் பக்தர்களே – இந்த ஆண்டு ஆன்லைன் பதிவு கட்டாயம்