கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் பிரபல மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு சிபிசிஐவிடம் சென்றது. அதுமட்டுமின்றி இறந்த மருத்துவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பல மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் மக்கள் பாதிக்கப்படுவதாக நீதிமன்றம் கூறிய நிலையில் போராட்டத்தை நிறுத்தி வழக்கம் போல் செயல்பட தொடங்கினர்.
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு
ஆனால் இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. kolkatta lady doctor murder case
அதாவது கொல்கத்தா ஆர் ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்திப் போஸ் என்பவர் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
Also Read: சென்னையில் அம்மா உணவகங்களுக்கு புதிய திட்டம் – அப்படி என்னென்னு தெரியுமா?
அவர் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அப்படி என்னென்ன முறைகேடுகள் தெரியுமா. அடையாளம் காண முடியாத பிணங்கள் மற்றும் உரிமை போராட்ட பிணங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளார். அதுமட்டுமின்றி பயோ மெடிக்கல் கழிவுகளை கடத்தியது, தேர்ச்சி பெற வைக்க மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட பல புகார்கள் எழுந்தது. இதனால் அவரை தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை