நேற்று தஞ்சை இன்று சென்னை. மெடிக்கல் ஊழியரின் வங்கி கணக்கிற்கு ரூ. 753 கோடி டெபாசிட் செய்துள்ளது சென்னை மாவட்ட கோட்டாக் மஹிந்திரா வங்கி. இதே போன்ற நிகழ்வு கடந்த சில நாட்களில் மட்டும் மூன்றாவது முறை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று தஞ்சை இன்று சென்னை ! மெடிக்கல் ஊழியருக்கு ரூ. 753 கோடி டெபாசிட் செய்த கோட்டாக் மஹிந்திரா வங்கி !
கோட்டாக் மஹிந்திரா வங்கி :
மஹாராஷ்டிரா மாநிலத்தினை மையமாகக் கொண்டு கோட்டாக் மஹிந்திரா வங்கி 2003 முதல் ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் இயங்கி வருகின்றது. தமிழ்நாட்டில் சென்னை , மதுரை , கோவை என அனைத்துப் பகுதிகளிலும் மொத்தம் 145 வங்கி கிளைகள் இயங்கி வருகின்றது.
JOIN WHATSAPP | CLICK HERE |
இன்று சென்னை மெடிக்கல் ஊழியர்க்கு :
சென்னையில் தேனாம்பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு மெடிக்கல் கடையில் ஊழியராக இருப்பவர் முகமது இத்ரிஸ். இவர் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் கோட்டாக் மஹிந்திரா வங்கியில் ( Account ) கணக்கு பயன்படுத்தி வருகின்றார். நேற்று இவரின் தொலைபேசி எண்ணுக்கு ரூ. 753 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது என்று குறுந்செய்தி வந்துள்ளது. ஆனால் இன்று தான் முகமது குறுந்செய்தியை பார்த்துள்ளார்.
வங்கியை தொலைபேசி மூலம் அணுகி தகவல் கேட்ட போது அதிகாரிகள் இவருக்கு சரியாக பதில் அளிக்கவில்லை. வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தினை தொடர்பு கொண்டாலும் எந்த ஒரு சரியான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் தற்போது இவரின் கணக்கு எண் பயன்படுத்த முடியாத அளவிற்கு முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் முகமது வங்கியை நேரடியாக அணுக இருக்கின்றார்.
தர்மபுரி முட்டை வியாபாரிக்கு 1900 கோடி வரி ! மகளிர் உரிமைத்தொகை நிராகரிப்பால் வந்த சோதனை !
முகமது கூறியது :
1. அதிர்ச்சியாக இருந்தாலும் இப்பணம் என்னுடையது கிடையாது.
2. வங்கியில் நடந்த ஏதேனும் ஒரு தவறான செயலால் நடந்திருக்கலாம்.
3. வருங்காலத்தில் தனக்கு IT பிரச்சனைகள் ஏதும் வரக்கூடாது என்பதற்க்காக வங்கியை நேரடியாக அணுக இருக்கின்றேன் என்று கூறினார்.
நேற்று தஞ்சை தனியார் நிறுவன பணியாளர் :
இதே போன்ற நிகழ்வு நேற்று கோட்டாக் மஹிந்திரா வங்கியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்தது. தனியார் நிறுவன பணியாளருக்கு ரூ. 765 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. எதனால் இவ்வளவு அதிகமான பணம் டெபாசிட் ஆனது என்பது தற்போது வரையில் குழப்பமாக இருக்கின்றது.
கோட்டாக் மஹிந்திரா வங்கியில் இது இரண்டாவது முறை அதிகளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கின்றது என்பதால் இவை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.