டிசம்பர் 3ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: கன்னியாகுமரி கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் உள்ளது. உலக அளவில் புனித சவேரியாருக்கென முதன் முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமையை இந்த பேராலயம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 3ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
மேலும் இந்த ஆலயத்தின் திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3ம் தேதி நிறைவடையும்.
மேலும் திருவிழாவின் ஒவ்வொரு நாள் விழாவும் நற்செய்தி வாசக கருப்பொருளில் நடைபெற்று வருவது வழக்கம். இதனை தொடர்ந்து டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் தேர் பவனி நடைபெறும்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு – ஒரே நாளில் 8 பேர் பலி – மக்களே கவனம்!
இறுதி நாளான டிசம்பர் 3ஆம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நடைபெறும். இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3 ஆம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு, உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆர். அழகு மீனா உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார்
தமிழகத்தில் பெருகிவரும் ஆன்லைன் மோசடி
2026 தேர்தலில் அதிமுகவுடன் TVK கூட்டணி இல்லை
அரசு பேருந்தில் இனி 90 நாட்களுக்கு முன் புக்கிங் செய்யலாம்