Breaking news கோவை பெண் சாக்கடைக்குள் விழுந்த விவகாரம்: தமிழகத்தில் பரபரப்பான மாவட்டங்களில் ஒன்றான கோவையின் முக்கிய சாலை தான் காந்திபுரம். மேலும் இந்த சாலையில் இருபுறங்களிலும் கடைகள் இருக்கும் நிலையில், குறிப்பாக அந்த பாதைகளில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாக்கடை தூர் வாரப்பட்ட நிலையில் கால்வாய் துவாரத்தை மூடாமல் இருந்துள்ளது. எனவே இது குறித்து அங்கிருந்த மக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!
இந்நிலையில் அந்த பக்கம் சென்ற பெண் ஒருவர், சாக்கடை திறந்து இருப்பதை கவனிக்காமல் திடீரென குழிக்குள் விழுந்துள்ளார். இதில் அவருக்கு காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்த மக்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து, பாதாள சாக்கடை குழி மூடாமல் இருந்ததால் பெண் உள்ளே விழுந்து காயமடைந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரருக்கு ₹50,000 அபராதம் விதித்து, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து, அந்த சாக்கடை மூடப்பட்டது.
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு இன்று முதல் தடை
உலக சாதனை படைத்த நியூசிலாந்து பவுலர் பெர்குசன்!
சென்னையில் 15 விமான சேவைகள் பாதிப்பு
ஆன்லைனில் செய்திகளை படிக்க விரும்பும் இந்தியர்கள்