தமிழகத்தில் வெங்காயம் விலை ஒரு கிலோ 100 ரூபாய்: தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால், காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் வெங்காய விலை தற்போது நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.
அதன்படி, பெரிய வெங்காயம் ஒரு கிலோ 70 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 20 முதல் 25 ரூபாய், ஒரு கிலோ சின்ன வெங்காயம் 60 ரூபாய், ஒரு கிலோ பச்சை மிளகாய் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வெங்காயம் விலை ஒரு கிலோ 100 ரூபாய் – கலக்கத்தில் பொதுமக்கள்!
அதுமட்டுமின்றி ஒரு கிலோ பீட்ரூட் 35 ரூபாய், அவரைக்காய் 50 ரூபாய், முட்டைக்கோஸ் 20 ரூபாய், உருளைக்கிழங்கு 40 ரூபாய், கேரட் 45 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. மேலும் காலிபிளவர் ஒன்று 15 முதல் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
2026 தேர்தலில் அதிமுகவுடன் TVK கூட்டணி இல்லை – தவெக புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டம்!
வெங்காயத்தின் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு விரைவில் விலை குறைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசின் நுகர்வோர் துறை தெரிவித்துள்ளது.
அரசு பேருந்தில் இனி 90 நாட்களுக்கு முன் புக்கிங் செய்யலாம்
IPL 2025ல் RCB அணி புதிய கேப்டன் யார் தெரியுமா?
தமிழகத்தின் இந்த பகுதியில் மலையேறலாம்?
நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா குற்றச்சாட்டு