Home » சினிமா » KPY பாலாவுக்கு விரைவில் டும் டும் டும்., பொண்ணு யார் தெரியுமா?.., அவரே சொன்ன குட் நியூஸ்!!!

KPY பாலாவுக்கு விரைவில் டும் டும் டும்., பொண்ணு யார் தெரியுமா?.., அவரே சொன்ன குட் நியூஸ்!!!

KPY பாலாவுக்கு விரைவில் டும் டும் டும்., பொண்ணு யார் தெரியுமா?.., அவரே சொன்ன குட் நியூஸ்!!!

KPY பாலா

விஜய் டிவியில் ஒளிபரப்பான KPY ஷோ மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் பாலா. இதையடுத்து குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக களமிறங்கி ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குட்டி குட்டி குழந்தைகளின் மனதில் இடம் பிடித்தார். தற்போது முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் அளவுக்கு வெள்ளித்திரையில் உயர்ந்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க பாலா, தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வருகிறார். இதுவரை 5 ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி சமீபத்தில் வெள்ளத்தால் அவதிப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா ஆயிரம் கொடுத்தார். இவரின் இந்த பணியை பார்த்து பலரும் பாராட்டுக்களை குவித்து வந்தார்.

மேலும் அவரை பார்த்து சிலர் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்த ஒரு கல்லூரி விழாவில் பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ஒரு மாணவி பாலாவுக்கு எப்போது திருமணம் என்று கேட்க, அதற்கு சற்றும் யோசிக்காமல் பாலா, தனக்கு அடுத்த மாதம் காதல் திருமணம் நடைபெற இருக்கிறது என்று கூறினார். அதை கேட்ட மாணவிகள் காதலி யார் என்று கேட்க, தனது புன்னகையை பதிலாக கொடுத்த KPY பாலா. எனவே அடுத்த மாதம் பாலாவுக்கு கல்யாணம் நடைபெற இருப்பது அவரின் ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழக மக்களே.., வந்தாச்சு புதிய ரேஷன் கார்டு.., மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்?.., சூப்பர் அப்டேட்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top