மக்களவை தேர்தல் தேதி நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூரியர் வாகனத்தில் சிக்கிய 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்க நகைகள்
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் அருகே மாநில எல்லையோரப் பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த கூரியர் சர்வீஸ் வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்க நகைகளை அவர்கள் கொண்டு சென்றது தெரிய வந்தது. அதாவது கூரியர் சர்வீஸ் வாகனத்தில் மொத்தம் 69 பெட்டிகளில் தங்க நகைகள் இருந்துள்ளது. மேலும் இதில் 45 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளுக்கு மட்டுமே உரிய ஆவணம் இருந்துள்ளது. மற்ற பெட்டிகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்ததாக எனக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இதையடுத்து 69 பெட்டிகளில் இருந்து சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ எடையுள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்து கருவூல அலுவலகத்தில் அதிகாரிகள் கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.