தற்போது கேரள அரசாங்கத்தின் சார்பில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC, அத்துடன் குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி :
கேரள அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தற்போது திருவனந்தபுரத்தில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கேரள அரசின் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் கட்டணமானது தனியார் பயிற்சி பள்ளிகளை காட்டிலும் 40% குறைவாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண விவரம் :
கேரள அரசின் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழக 11,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் ! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு !
மேலும் இரு சக்கர வாகனத்திற்கு மட்டும் ரூபாய் 3500, நான்கு சக்கர வாகனத்திற்கு மட்டும் ரூபாய் 9000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பழங்குடியினருக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.