தகைசால் தமிழர் விருதிற்கு குமரி அனந்தன் தேர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !தகைசால் தமிழர் விருதிற்கு குமரி அனந்தன் தேர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

இந்த ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருதிற்கு குமரி அனந்தன் தேர்வு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும் இந்த விருது வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கும் தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும்,

அத்துடன் இந்த விருதிற்கான நபர்களை தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

அந்த வகையில் இந்த தகைசால் தமிழர் விருதினை கடந்த 3 ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரைய்யா, ஆர்.நல்லகண்ணு மற்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

அந்த வகையில் நடப்பாண்டில் இவ்விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (01.08.2024) நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் தனது இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கியவரும்,

காந்தி ஃபோரம் அமைப்பின் தலைவரும் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தனை பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !

இதனை தொடர்ந்து தகைசால் தமிழர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட குமரி அனந்தனுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும்

வரும் ஆகஸ்ட் திங்கள் 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *