இந்த ஆண்டு திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி இன்று நடைபெற இருக்கிறது. அதன்படி, கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். இதன் மூலம் கும்ப ராசிக்கு 2-ம் இடத்தில் இருந்து சனிபகவான் பலன் தரப்போகிறார். எனவே நீங்கள் இதுவரை அனுபவித்த கஷ்டங்கள் இன்றோடு விலகப் போகிறது. மேலும் இந்த சனி பெயர்ச்சியில் கும்ப ராசியினருக்கு என்னென்ன பலன்கள் கிடைக்க போகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம் வாங்க,
கும்ப ராசிக்காரர்களுக்கான பலன்கள்:
ஜன்மச்சனி விலகி இத்தனை நாட்கள் அனுபவித்த கஷ்டங்கள் தூர விலகும். குறிப்பாக சதயம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் மனப் பாரம் நீங்கி, பூரண சந்தோஷம் கிட்டும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் உயரும்.
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் விலகி, மகிழ்ச்சி பெருகும். அடுத்தவர்களின் விஷயங்களில் மூக்கை விடாமல் இருந்தால் நல்லது.
உடலில் உள்ள நோய்கள் தீரும், காலில் சின்ன சின்ன காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்கள் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களை சற்றுத் தள்ளி போடுவது நல்லது.
கடன் பிரச்சனைகள் தேடி வரும். எனவே கடன் வாங்குவதை நிறுத்தினால் நல்லது. திடீர் பணவரவு உண்டாகும். சொந்தமாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
பெண்கள் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அதிக சம்பளத்துடன் புதிய உத்தியோகம் கிடைக்கும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
கும்பம் சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள்:
கும்ப ராசியினர் மகான்கள் மற்றும் சித்தர்கள் வழிபாடு செய்தல் நல்லது. மேலும் திருக்கொள்ளிக்காடு தலத்துக்குச் சென்று வந்தால் நல்லது கிட்டும்.