நடிகை குஷ்பூ திடீர் ராஜினாமாவுக்கு என்ன காரணம்? அவரே சொன்ன பகீர் தகவல்!நடிகை குஷ்பூ திடீர் ராஜினாமாவுக்கு என்ன காரணம்? அவரே சொன்ன பகீர் தகவல்!

Breaking News: நடிகை குஷ்பூ திடீர் ராஜினாமாவுக்கு என்ன காரணம்: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை குஷ்பு. அப்போதே ஒரு நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அது குஸ்புவுக்கு தான். அப்படி சினிமாவில் மேலோங்கி இருந்த இவர் தற்போது அரசியலில் ஒரு கை பார்த்து வருகிறார். கடந்த 2010ம் ஆண்டு அரசியலில் நுழைந்த இவர் திமுக, காங்கிரஸ் கட்சியில் தாவி 2020ல் பாஜக கட்சில சேர்ந்தார். அந்த கட்சியில் சேர்ந்தவுடன் 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார்.

நடிகை குஷ்பூ திடீர் ராஜினாமாவுக்கு என்ன காரணம்

அதில் தோல்வி அடைந்த அவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டார். அந்த பதவியில் இருந்து அவர் பெண்க்ளுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க தொடங்கினார். குறிப்பாக பலவேறு பகுதிகளில் பெண்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தார். மேலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் போட்டியிடவில்லை. இந்நிலையில் இவர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை குஷ்பு தனது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள தகவல் நேற்றிரவு வெளியானது. அவர் கடந்த ஜூன் 28ஆம் தேதியே தனது ராஜினாமா கடிதத்தை மகளிர் நல அமைச்சகத்துக்கு துறை சார்ந்த அதிகாரிக்கு அனுப்பியதாக அனுப்பியதாக கூறப்படுகிறது.

Also Read: தமிழகத்தில் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டம் – சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

மேலும் குஷ்புவின் ராஜினாமாவை ஏற்று அரசிதழில் ஜூலை 30ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அவர் திடிரென ராஜினாமா செய்ய என்ன காரணம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். national commission of women

மேலும் ஒரு சிலர் மக்களவை தேர்தலில் அவருக்கு வாய்ப்பு கொடுக்காதது தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், நடிகை குஷ்பு

” நான் ராஜினாமா செய்ததற்கு யாரும் காரணம் இல்லை. யாரும் என்னை விலக சொல்லி அழுத்தம் கொடுக்கவில்லை.

கட்சி சார்பாக மேலும் உழைக்க வேண்டும் எந்த நோக்கத்தில் தான் நான் ராஜினாமா செய்தேன் என்று கூறியுள்ளார். Khushbu Sundar

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

விமான பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்

ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ்

சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *