உலகையே உலுக்கிய குவைத் தீ விபத்து விவகாரம்: தற்போது உலக முழுவதும் பேசி கொண்டிருக்கும் செய்தி என்றால் அது குவைத் தீ விபத்து பற்றி தான். சில நாட்களுக்கு முன்னர் தெற்கு குவைத்தில் இருக்கும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அதிகமான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். குறிப்பாக 46 இந்தியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரில் உயிரிழந்தனர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேரும், கேரளாவை சேர்ந்த 23 பேரும் அடங்கும். இன்னும் சில இந்தியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இன்னும் பலிகள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு எடுத்துவர தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொச்சி சென்றுள்ளார். உயிரிழந்தவர்களின் 46 உடல்களும் விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கிருந்து தமிழர்களின் உடல்கள் தனித்தனி வாகனம் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது. குவைத் தீ விபத்து விவகாரம் – Fire accident news – india latest news
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் … அகவிலைப்படி உயர்வு? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
காதலியின் தலையை வெட்டி வீடியோ வெளியிட்ட சஞ்சய் தத் ரசிகர்
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு