Home » செய்திகள் » குவைத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து – 40 இந்தியர்கள் பலி!!

குவைத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து – 40 இந்தியர்கள் பலி!!

kuwait terrible fire accident குவைத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த 40 பேர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தீ விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த தீ விபத்தில் சிக்கிய 90 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் உள்ள நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இருந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த மற்றவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே இந்தியர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஷால் – லைகா கடன் விவகாரம் – ஜூன் 28ம் தேதி இறுதி விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top