![அரசு பள்ளி மாணவி சாதனை., நீதிபதியாக தேர்வான கூலித் தொழிலாளி மகள் - குவியும் பாராட்டு!!!](https://www.skspread.com/wp-content/uploads/2024/02/ff-226-jpg.webp)
குடிசை வீட்டில் வாழ்ந்து வரும் கூலித் தொழிலாளி மகள் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நீதிபதியான கூலித் தொழிலாளி மகள்
தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெண்கள் எல்லா துறைகளிலும் சாதித்துக் காட்டி வருகின்றனர். சமீபத்தில் கூட பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு பெண் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். அதாவது திருவாரூர் மாவட்டம் அருகே இருக்கும் நாலாநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தான் கூலித்தொழிலாளி கணேசன். அவருடைய மனைவி சந்திரா, மகள் சுதா. அவர்கள் கூலித்தொழில் செய்து வந்ததால் மகளை 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
![](https://www.skspread.com/wp-content/uploads/2024/02/1-212-jpg.webp)
இதனை தொடர்ந்து சுதா திருநெல்வேலியில் இருக்கும் அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்ட படிப்பை முடித்த கையோடு திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். வேலையில் இருந்து கொண்டே அரசு நடத்திய நீதிபதி தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த எல்லா தேர்வுகளிலும் வெற்றி பெற்று சுதா நீதிபதியாக தேர்வாகியுள்ளார். ஏழ்மையான குடிசை வீட்டில் இருந்து கொண்டு வெற்றி கனியை சுவைக்க வேண்டும் என்று கடினமாக உழைத்து தற்போது இந்த நிலைமைக்கு வந்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
![](https://www.skspread.com/wp-content/uploads/2024/02/2-96-jpg.webp)