
தமிழ் சினிமாவில் அடுத்த மாதம் புதிய படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்களின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
லால் சலாம்:
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கேமியோவில் நடித்து கடந்த மாதம் 12ம் தேதி வெளியான திரைப்படம் தான் லால் சலாம். ஸ்போர்ட்ஸ் டிராமாவாக வெளியான இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடு ரோலில் நடித்திருத்தனர். ஓப்பனிங்கில் நல்ல வசூலை அள்ளிய நிலையில், அடுத்த சில நாட்களில் மண்ணை கவ்வ தொடங்கி விட்டது. இந்நிலையில் இந்த படம் வருகிற மார்ச் 8ம் தேதி Netflix OTT தளத்தில் ரிலீஸ் ஆகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
லவ்வர்:
மணிகண்டனின் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வெளியான லவ்வர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. லவ் டுடே படத்தை தொடர்ந்து இன்றைய காதலர்கள் எப்படி உள்ளார்கள் என்று அப்படியே காட்டியதால் இளைஞர்களுக்கு இப்படம் பிடித்து போனது. இந்நிலையில் இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் மார்ச் 8ம் தேதி வெளியாகிறது.
மிஷன் சாப்டர் ஒன்:
இயக்குனர் ஏ.எல்.விஜய் படைப்பில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு ரிலீசான திரைப்படம் தான் மிஷன் சாப்டர் ஒன். இந்த படம் அருண் விஜய் கெரியரில் சிறந்த திரைப்படமாக அமைந்துள்ளது. மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற மிஷன் சாப்டர் ஒன் நாளை மார்ச் 2 ரிலீஸ் ஆகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.