ரிலீஸ் தேதியை குறித்த "லால் சலாம்" படக்குழு.., மொய்தீன் பாய் ஆட்டத்தை பார்க்க ரெடியா நண்பா., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!ரிலீஸ் தேதியை குறித்த "லால் சலாம்" படக்குழு.., மொய்தீன் பாய் ஆட்டத்தை பார்க்க ரெடியா நண்பா., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளும் பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது `இயக்கி வரும் திரைப்படம் தான் லால் சலாம். இப்படத்தில் லீடு ரோலில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட் கதைக்களத்தை மையமாக உருவான இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக இருந்து வருகிறது. மேலும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் கெஸ்ட் ரோலில் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் பிப்ரவரி 9ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது  இருந்து ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *