லால் சலாம் படத்தை ஓடிடியில் வெளியிட முடியாது?.., அது கிடைத்தால் மட்டுமே ரிலீஸ்?.., படக்குழுவுக்கு செக் வைத்த நிறுவனம்!!லால் சலாம் படத்தை ஓடிடியில் வெளியிட முடியாது?.., அது கிடைத்தால் மட்டுமே ரிலீஸ்?.., படக்குழுவுக்கு செக் வைத்த நிறுவனம்!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து ஓடிடி நிறுவனம் ஷாக்கிங் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை ஹீரோவாக நடித்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்று சுமாரான வசூலை ஈட்டியது. இப்படம் தோல்வி அடைவதற்கு காரணம் படத்தோட சில காட்சிகள் பதிவாகி இருந்த ஹார்ட் டிஸ்க் காணாமல் போனது என்று இயக்குனர் தெரிவித்திருந்தார்.

லால் சலாம் படத்தை ஓடிடியில் வெளியிட முடியாது?.., அது கிடைத்தால் மட்டுமே ரிலீஸ்?.., படக்குழுவுக்கு செக் வைத்த நிறுவனம்!!

இந்நிலையில் இந்த படத்தை குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படத்தின் ஓடிடி உரிமையை நெட் பிலிக்ஸ் ஓடிடி நிறுவனம் வாங்கி இருந்தது. படம் வெளியாகி இரண்டு மாதங்கள் ஆன போதிலும் இன்னும் ஓடிடியில் வெளியாகாமல் இருந்து வரும் நிலையில் தொலைந்து போன  ஹார்ட் டிஸ்க் கிடைத்தால் மட்டுமே ஓடிடியில் வெளியிடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் வருகிற ஏப்ரல் 12ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

டாடா பட நடிகைக்கு விரைவில் திருமணம்.., அதுவும் “மஞ்சும்மல் பாய்ஸ்” பட நடிகரோடயா?.., ரசிகர்கள் வாழ்த்து!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *