மொய்தின் பாய் ஆட்டமே இனிமே தான் இருக்கு.., "லால் சலாம்" ட்ரைலர் ரிலீஸ்.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!மொய்தின் பாய் ஆட்டமே இனிமே தான் இருக்கு.., "லால் சலாம்" ட்ரைலர் ரிலீஸ்.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனருமான சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் தான் லால் சலாம். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் லீடு ரோலில் நடித்த நிலையில் அவர்களுடன் சேர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அதனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

மேலும் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில், பாடல்கள் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் சில பணிகள் நிறைவடையாததால், படத்தை வருகிற பிப்ரவரி மாதம் 9ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் நடித்த லால் சலாம் படத்தின் டிரைலர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. 

இந்திய ஹாக்கி வீரர் மீது போக்சோ வழக்கு.., புகார் கொடுத்த கைப்பந்து வீராங்கனை – போலீஸ் விசாரணை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *