ஓட்டுநர் பழகுநர் உரிமம்
தற்போது டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே ஆன்லைன் மூலமாக தான் இயங்கி கொண்டிருக்கிறது. ஆதார் கார்டு முதல் டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்டவைகளை வரை ஆன்லைன் மூலமாக தான் விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஓட்டுநர் பழகுநர் உரிமத்திற்கு (LLR) ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று மாநில போக்குவரத்து ஆணையர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொதுவாக ஓட்டுநர் பெற விரும்பும் மக்கள், ஓட்டுனர் பயிற்சி மையம் மூலம் தான் LLR பெற்று வந்தனர். இனி மேல் “இ சேவை” மூலம் ஓட்டுநர் பழகுநர் உரிமத்திற்கு (LLR) விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அனைத்து மோட்டார் வாகனத்துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய அனைத்து சேவைகளையும் இனிமேல் இ-சேவை மையம் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.