சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளரான லெஜண்ட் சரவணன், தி லெஜண்ட் படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றிருந்தாலும், அவருடைய ஆக்டிங்கை பார்ப்பதற்காகவே தியேட்டரில் கூட்டம் குவிந்தது. சொல்லப்போனால் நினைத்ததை விட படக்குழு வசூலை அள்ளியது. தற்போது மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக லெஜண்ட் சரவணன் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றியுள்ளார். அப்போது வெளியான போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த அளவுக்கு அவர் லுக் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனது X பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் தன்னுடைய 2வது படம் குறித்து பேசியுள்ளார். அதாவது “All Set for #LegendsNext Process Started…. Revealing Soon…” என பதிவு செய்துள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது அவருடைய இரண்டாம் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த படத்தோட இயக்குனர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.