Home » செய்திகள் » மக்களே உஷார் ! இந்த பிரச்சினைகள் உங்களுக்கு இருக்கா? அப்போ தப்பி தவறி கூட எலுமிச்சை சாப்பிடாதீங்க?

மக்களே உஷார் ! இந்த பிரச்சினைகள் உங்களுக்கு இருக்கா? அப்போ தப்பி தவறி கூட எலுமிச்சை சாப்பிடாதீங்க?

மக்களே உஷார் ! இந்த பிரச்சினைகள் உங்களுக்கு இருக்கா? அப்போ தப்பி தவறி கூட எலுமிச்சை சாப்பிடாதீங்க?

நமக்கு எளிதாக அனைத்து கடைகளிலும் கிடைக்கும் தான் எலுமிச்சை பழம், மக்களே உஷார் ! இந்த பிரச்சினைகள் உங்களுக்கு இருக்கா? அப்போ தப்பி தவறி கூட எலுமிச்சை சாப்பிடாதீங்க?

நம் அன்றாட பயன்படுத்தும் உணவு பொருட்களில் முக்கியமான ஒன்று தான் எலுமிச்சை பழம். இதில் வைட்டமின் C அதிகமாக காணப்படுகிறது. மேலும் இந்த பழம் ஒப்பீட்டளவில் ஆரோக்கியமானதாக அறியப்படுகிறது. அதுமட்டுமின்றி இப்பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருந்தாலும், சில குறிப்பிட்ட பிரச்சினை இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் தீங்கு விளைவிக்கும். எனவே யாரெல்லாம் எலுமிச்சை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வயிற்றுப் புண்கள் மற்றும் செரிமானப் பிரச்சினை இருப்பவர்கள் எலுமிச்சை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் எலுமிச்சையில் அதிகளவு அமிலத்தன்மை இருக்கிறது.

அதுமட்டுமின்றி எலுமிச்சை சாறு அதிகமாக உணவில் சேர்த்தால் , அது பற்களில் கூச்ச உணர்வை உண்டாக்கும். அப்படி தொடர்ந்து எடுத்து கொண்டால் பற்சிப்பியில் சிதைவை ஏற்படுத்தும். எனவே பற்கூச்சம் கொண்டவர்கள் தவறியும் எலுமிச்சை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் பலி விவகாரம் – ஹோட்டல் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி மெத்தனால் வாங்கியது அம்பலம் !

மேலும் அரிதாக சிட்ரஸ் ஒவ்வாமை எனும் அரிய நோய் உள்ளவர்களும் ஒருபோதும் எலுமிச்சை சாப்பிடவே கூடாது. அதே போல் சிறுநீரக கற்கள், இதய நோய் பாதிப்புள்ளவர்கள் மற்றும் வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எலுமிச்சை சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top