பயங்கர விபத்தில் சிக்கிய லியோ பட நடிகரின் குடும்பம்… சம்பவ இடத்திலேயே பலியான ஒரு உயிர்!பயங்கர விபத்தில் சிக்கிய லியோ பட நடிகரின் குடும்பம்… சம்பவ இடத்திலேயே பலியான ஒரு உயிர்!

பயங்கர விபத்தில் சிக்கிய லியோ பட நடிகரின் குடும்பம்: மலையாள திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் மேத்யூ தாமஸ். இவர் நடித்த ஒரு சில படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த வருடம் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் அவருக்கு மகனாக நடித்திருந்தார். அப்படம் அவருக்கு  ஒரு திருப்பு முனையாக இருந்தது என்று சொல்லலாம். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

leo movie actor mathew thomas family car accident

இந்நிலையில் இளம் நடிகர் மேத்யூ தாமஸ் குடும்பத்தினர் விபத்தில் சிக்கியுள்ளது. அதாவது மேத்யூ தாமஸ் குடும்பத்தினர் கொச்சியில் நடைபெற்ற குடும்ப விழாவை முடித்து கொண்ட பிறகு, வீட்டிற்கு திரும்பிய போது இந்த பயங்கர விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் அவருடைய அப்பா, அம்மாவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகின்றனர். இதில் சோகமான விஷயம் என்னவென்றால் மேத்யூ தாமஸின் உறவினர் பீனா டேனியல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பயங்கர விபத்தில் சிக்கிய லியோ பட நடிகரின் குடும்பம்

கொடைக்கானல் மலர் கண்காட்சி 2024 – நுழைவு கட்டணம் அதிகரிப்பு – சுற்றுலா பயணிகள் அவதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *