லியோ திரைப்படம் OTT வெளியீடு விஜய் நடிப்பில் வருகின்ற அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் தமிழ் , ஹிந்தி , கன்னடம் , தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியான 4 வாரங்களுக்குள் OTT தளங்களில் வெளியாக உள்ளது. இதனால் வசூலை பெறுவதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.
லியோ திரைப்படம் OTT வெளியீடு
விஜய் நடிப்பில் லியோ :
இளைய தளபதி என்று ரசிகர்களில் அழைக்கப்படும் விஜயின் 67வது திரைப்படமான லியோ வருகின்ற அக்டோபர் மாதம் 19ம் தேதியில் வெளியாக இருக்கின்றது. லோகேஷ் கனகராஜின் LCU பாணியில் உருவான இந்த திரைப்படத்தில் திரிஷா , அர்ஜுன் , கவுதம் மேனன் , பிரியா ஆனந்த் போன்ற பல திரை பிரபலங்கள் நடித்து உள்ளனர். சுமார் 250 கோடி முதல் 300 கோடி வரையில் செலவு செய்து இந்த திரைப்படமானது எடுக்கப்பட்டு உள்ளது.
இசை வெளியீடு :
லியோ திரைப்படத்தில் இருந்து ‘ நா ரெடி தான் வரவா ‘ பாடல் விஜயின் பிறந்த நாள் சிறப்பாக இனையதளத்தில் வெளியாகியது. தற்போது பாடலில் பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் பாடலில் இருக்கும் சில வரிகள் மட்டும் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக இசை வெளியீடு எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர். இந்நிலையில் வருகின்ற 30ம் தேதி சனிக்கிழமை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்
OTT வெளியீடு :
திரைப்படங்கள் திரையங்குகளில் வெளியான சில நாட்களில் OTT தளங்களில் வெளியாவது வழக்கம் தான். ஆனால் இத்திரைப்படத்தின் OTT உரிமத்தினை Netflix நிறுவனம் சுமார் 160 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கின்றது. அதன் படி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நான்கு வாரத்திற்கு பின் Netflix OTT தளங்களில் வெளியாக இருக்கின்றது. திரையரங்கில் நான்கு மொழிகளில் மட்டுமே திரைப்படம் வெளியாகும். ஆனால் OTTல் உலகின் பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியாக இருக்கின்றது.
லியோவிற்கு வந்த சிக்கல் :
விஜய் திரைப்படத்திற்கு எதிர்ப்புகளும் சிக்கல்களும் வருவது வழக்கம் தான். அதே போல் லியோ திரைப்படத்திற்கு ஹிந்தி மொழியில் திரையரங்கில் வெளியாவதற்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது. மல்டி பிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் லியோ திரைப்படம் வெளியிட மாட்டோம் என்று கூறியுள்ளனர். ஏனென்றால் திரையரங்கில் திரைப்படம் வெளியான 8 வாரங்களுக்கு பின் தான் OTT தளங்களில் வெளியிட வேண்டும். ஆனால் லியோ திரைப்படம் 4வாரங்களில் OTT தளத்தில் வெளியாக இருக்கின்றது. OTTல் 8வாரங்களுக்கு பின் திரைப்படம் வெளியாகும் என்றால் ஹிந்தி மொழியில் மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று கூறி உள்ளனர்.
விஜய் மகன் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகன் இவர் தானா !
வசூல் பாதிப்பு :
திரைப்படங்கள் திரையரங்கில் வெளியான 8 வாரங்களுக்கு பின் OTT தளங்களில் வெளியிட்டால் மட்டுமே திரையரங்குகளிலும் வசூல் ஆகும். அதனை போல் OTT தளங்களுக்கும் பயன் இருக்கும். RRR மற்றும் KGF2 திரைப்படம் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் ஆயிரம் கோடி வசூல் செய்தது. ஆனால் லியோ திரைப்படம் திரையரங்கில் வெளியான 4 வாரங்களுக்குள் வெளியானால் வசூலில் பாதிப்பு ஏற்படும்.
OTT வெளியீட்டு தாமதம் ஆகுமா :
ஹிந்தி திரையுலகம் மிகப்பெரியது. வட இந்தியா முழுவதும் இருக்கும் திரையரங்குகள் அனைத்திலும் மல்டி பிளக்ஸ் தான் அதிகளவில் இருக்கின்றது. இதனால் ஹிந்தி திரையுலகம் சார்பில் 8 வாரங்களுக்கு பின் தன் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். எனவே தயாரிப்பாளர்கள் சார்பில் கூறப்பட்டு இருக்கும் OTT வெளியீடு தாமதம் ஆக்குவதர்க்கு வாய்ப்புகள் இருக்கின்றது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
லியோ திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் 26 நாட்களே இருக்கின்றது. லியோ திரைப்படம் ஹிந்தி டப்பிங் திரைப்படம் தான். லியோ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு படக்குழு மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் இந்நேரத்தில் இந்தி திரையுலகில் OTT தளங்களில் திரைப்படம் வெளியாவதற்கு புதிய சிக்கல் வந்துள்ளது. விஜய் படத்திற்கு வராத பிரச்சனையா என்று ரசிகர்கள் கூறினாலும் திரைப்படத்தில் விஜயை காண ரசிகர்கள் ஆர்வமாய் இருக்கின்றனர்.