விஜய் நடிப்பில் அக்டோபர் 19ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் லியோ. லியோ திரைப்படத்தின் இசை வெளியீடு வருகின்ற 30ம் தேதி சென்னை , நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் லியோ இசை வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது என்ற அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இதற்க்கு அரசியல் காரணம் இல்லை என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நண்பா மற்றும் நண்பிகளுக்கு சோக செய்தி ! லியோ இசை வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து !
LCU பாணியில் லியோ :
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் LCU பாணியில் தயாரிக்கப்பட்டு உள்ள திரைப்படம் லியோ. மேலும் விஜய் நடிப்பில் 67வது திரைப்படமாகவும் வெளியாக இருக்கின்றது. விஜய்யுடன் திரிஷா , அர்ஜுன் , சஞ்சய் தத் , மிஸ்கின் போன்ற பல திரைபிரபலங்கள் நடித்துள்ளனர். 300 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு உள்ள லியோ திரைப்படம் பல மொழிகளில் வெளியாக இருக்கின்றது.
லியோ இசை வெளியீடு :
லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவினை சென்னையில் நடத்தாமல் தமிழ்நாட்டில் வேறு சில இடங்களில் நடத்தலாம் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் வருகின்ற 30ம் தேதி சனிக்கிழமை நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது என்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாடுகள் முழுமையாக பிரம்மாண்டமாக நடைபெற்று வந்தது. ஆனால் திரைப்படத்தில் இருந்து முதல் பாடலாக ‘ நா ரெடி தான் வரவா ‘ பாடல் இணையதளத்தில் வெளியாகியது. பல பிரச்சனைகளுக்கு பின் பாடலில் இருந்து சில வரிகள் நீக்கம் செய்யப்பட்டது.
சித்தா திரைப்படம் முழு விமர்சனம் ! பாய்ஸ் படத்தில் வரும் முன்னாவாக மாறிய சித்தார்த் !
லியோ இசை வெளியீடு நிகழ்ச்சி ரத்து :
இசை வெளியீடு விழா நடைபெற இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் நிகழ்ச்சியானது ரத்து செய்யப்பட்டு உள்ளது. இசை வெளியீட்டு நிகழ்ச்சி திடீரென்று ரத்து செய்யப்பட்டு இருப்பதற்கான அரசியல் தான் காரணம் என்று பல தரப்பினர் கூறி வந்தனர்.
தயரிப்பாளர் கூறியது :
இசை வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தினை Seven Screen Studio தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது. நிகழ்ச்சிக்கான பாஸ் ( அனுமதி சீட்டு )ரசிகர்கள் தரப்பில் அதிகமாக கேட்கப்பட்டு இருந்தது. அதிகமான ரசிகர்கள் கூட்டம் இருக்கும் போது பாதுகாப்பு தர முடியாது. இதன் காரணமாகவே இசை வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது. நிகழ்ச்சி ரத்து செய்வதற்கு அரசியல் காரணம் ஏதும் கிடையாது என்றும் கூறியுள்ளனர். மேலும் லியோ திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இவ்வாறு தயாரிப்பு நிறுவனம் சார்பில் லலித் குமார் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எங்கள் முகநூல் பக்கத்தில் இணைந்திட இங்கே கிளிக் செய்யவும்
ஏமாற்றத்தில் ரசிகர்கள் :
இசை வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து செய்வதற்கு அரசியல் தான் காரணம் என்று தகவல் பரவி வருகின்றது. ஆனால் இவைகள் உண்மை இல்லை என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. லியோ திரைப்படத்தின் இசை வெளியீடு விழா ரத்து ஆனதால் விஜயின் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். அப்டேட்கள் அடுத்தடுத்து இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் இசை வெளியீட்டு விழாவில் விஜயின் பேச்சை கேட்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.